சர்வதேச மகளிர் தினம்! மாமல்லபுரம் சுற்றுலா தலங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள உலகப் புராதன சின்னங்கள் உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்கு வெண்ணெய் உருண்டைக்கல், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் இலவசமாக பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாகவும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமாக 40 ரூபாயும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 600 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamallapuram tourism place entry free


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->