போட்டி போட்டு போராட்டம் நடத்தும் ஆண்கள், பெண்கள் - ஈரோட்டில் நடந்தது என்ன?
man and woman protest in erode
போட்டி போட்டு போராட்டம் நடத்தும் ஆண்கள், பெண்கள் - ஈரோட்டில் நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளைப்பாறைமேடு பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மதியம் 12 மணியளவில் மதுக்கடையை மூடக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்த மதுக்கடையில் குடித்துவிட்டு இங்கேயே தங்கி விடுகின்றனர்.
எந்த வேலைக்கும் செல்லாமல் மதுக்கடையிலேயே இருப்பதால் குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக இன்று மதுபானக் கடை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த மதுபானக் கடையில் மது குடிப்பதற்காக ஏராளமான ஆண்கள் காலையிலேயே காத்து இருந்தனர். ஆனால், மதுக்கடை திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த ஆண்கள் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதை அடுத்து 12.30 மணி அளவில் மதுக்கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு போராட்டம் செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
man and woman protest in erode