சீட்டு கேட்டு கல்லூரி ஊழியர்களை மிரட்டிய போலி எஸ்ஐ கைது - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரியில் செயல்பட்டு வரும் எஸ்ஆர்எம் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இந்த கல்லூரிக்கு போலீஸ் போல் சீருடை அணிந்து வந்த ஒரு நபர் கல்லூரி வரவேற்பாளரிடம் தான் கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தனக்கு ஒரு எம்டெக் சீட் வேண்டும் என்றும் அதுவும் உதவித்தொகையில் வேண்டுமென்றும் கேட்டுள்ளார் இதை எடுத்து கல்லூரி ஊழியர்கள் அந்த நபரிடம் தன்னுடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.

 

உடனே அந்த நபர் காவல் உதவி ஆய்வாளர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இருப்பினும் சந்தேகம் அடைந்த கல்லூரி ஊழியர்கள் சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி மறைமலைநகர் போலீசார் விரைந்து வந்து  இந்த நபர் வைத்திருந்த அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்தனர் அதில் அந்த அடையாள அட்டை போலி என்பது தெரியவந்தது.

அதன் பின்னர் போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அந்த விசாரணையில் அந்த நபர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் முஜீத் என்பது தெரிய வந்தது.

மேலும்  டிப்ளமோ படித்த அந்த நபர் கடந்த ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி, தோல்வி அடைந்த நிலையில் தனது உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடம் தான் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன் என்று கூறி ஏமாற்றி வந்துள்ளார்" என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அப்துல் முஜீத் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த போலி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இருப்பினும் போலீசார் அப்துல் முஜீத் இதுபோன்று வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி ஆய்வாளர் என்று கூறி கல்லூரியில் அட்மிஷன் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for ask seet with fake document in chengalpat SRM college


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->