பிறந்த நாள் விழாவை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நபர் கைது!
Man arrested for cutting birthday cake with knife
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் புதிய திராவிட கழகம் செயலாளர் தனது பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் அருகே குட்டூரை சேர்ந்தவர் ராஜா (28), புதிய திராவிட கழகம் கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக இவர் உள்ளார்.
நண்பர்களுடன் ஆக.17 இரவு தனது பிறந்த நாள் விழாவின் போது பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார்.
இது குறித்த போட்டோ வைரலான நிலையில். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, புதிய திராவிட கழகம் கட்சியின் செயலாளர் ராஜாவை கைது செய்தார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Man arrested for cutting birthday cake with knife