சென்னையில் முதன் முறையாக கூரியர் மூலம் கஞ்சா கேக் கடத்திய வாலிபர் கைது.!!
man arrested for drugs cake kidnape in chennai
சென்னையில் முதன் முறையாக கூரியர் மூலம் கஞ்சா கேக் கடத்திய வாலிபர் கைது.!!
சென்னையில் கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெட் வரிசையில் தற்போது கஞ்சா கேக்கும் முதன்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கஞ்சா கேக்கை சாப்பிட்டாலும் இளைஞர்களுக்கு போதையுடன் கிளுகிளுப்பையும் ஏற்படுத்தும். இந்தக் கஞ்சா கேக்கை பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
இந்த கஞ்சாவை கூரியர் பார்சல் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று முன்தினம் இரவு ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர்.
அப்போது, அந்தக் கடையில் இருந்த கூரியர் பார்சல் ஒன்றை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில், 200 கிராம் எடையுள்ள கஞ்சா கேக் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சா கேக்கை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இந்தக் கடத்தல் தொடர்பாக சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஏக்நாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை செய்ததில், சென்னைக்கு தற்போது தான் முதன்முதலாக விற்பனைக்கு வந்துள்ளது என்றும், வடமாநிலங்களில் இதை சர்வ சாதாராணமாக விற்பனை செய்கிறார்கள் என்றும், இந்தக் கேக்கை விருந்து நிகழ்ச்சிகளில் பரிமாறுகிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கஞ்சா சாக்லெட், கஞ்சா கேக் போன்ற போதை பொருட்களை தடை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆந்திரா, பீகார், ஒடிசா, அரியானா, திரிபுரா ஆகிய மாநில டி.ஜி.பி.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
English Summary
man arrested for drugs cake kidnape in chennai