மனைவியுடன் தகராறு.! பெற்ற மகனுக்கே எமனாக மாறிய தந்தை - தென்காசியில் சோகம்.! - Seithipunal
Seithipunal


மனைவியுடன் தகராறு.! பெற்ற மகனுக்கே எமனாக மாறிய தந்தை - தென்காசியில் சோகம்.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகே செல்லிபட்டினம் தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-கார்த்தீஸ்வரி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், குடிப்பழக்கம் உடைய முனியாண்டிக்கும் அவரது மனைவிக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, மதுபோதையில் இருந்த முனியாண்டி தனது இளைய மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று அங்கு அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், மகிழன் பள்ளிக்கோ, வீட்டிற்கோ திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததைக் கண்ட கார்த்தீஸ்வரி, சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன் படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவனை பள்ளியில் இருந்து அழைத்து வந்த தந்தை முனியாண்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது மகன் மகிழனை அழைத்துக் கொண்டு புளியங்குடி பகுதியிலுள்ள மதுபானக் கடையில் மதுபாட்டில் வாங்கி விட்டு அருகே இருந்த நாணயம் என்பவரது தோப்பிற்கு சென்று மது அருந்தியதாகவும், தோப்பில் உள்ள கிணற்றில் மகிழனை வீசி கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill son in tenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->