ஓரினச்சேர்க்கைக்கு மறுப்புத் தெரிவித்த இளைஞர் - ஆத்திரத்தில் ஆணுறுப்பில் வெந்நீரை ஊற்றிய வாலிபர் கைது.!! - Seithipunal
Seithipunal


ஓரினச்சேர்க்கைக்கு மறுப்புத் தெரிவித்த இளைஞர் - ஆத்திரத்தில் ஆணுறுப்பில் வெந்நீரை ஊற்றிய வாலிபர் கைது.!!

சென்னையில்  பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு. தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு அவரது பெற்றோர் வரன் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே பாலகுருவுக்கு ஹோமோசெக்ஸ் பார்ட்னர்களை தேர்வு செய்யும் ஆப் அறிமுகமாகியுள்ளது. அதில், ஓரினச்சேர்க்கை வீடியோக்களை பார்த்ததும் ஆசை ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்த செயலி மூலமாக பாலகுருவுக்கு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போன் மூலமாக பேசி காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், இவர்கள் இருவரும் அதிகம் நெருக்கமாகி ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழலாம் என்ற முடிவுக்கு வந்தனர். 

இதற்கிடையே பாலகுருவின் பெற்றோர் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பைக்கு சென்றுள்ளனர். அப்போது பாலகுரு, அஜித்துக்கு போன் செய்து அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து, இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பாலகுரு நேற்று சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித், பாலமுருகன் மீது சுடுதண்ணீரை ஊற்றியுள்ளார். 

இதில் அவரின் கை, வயிறு, மார்பு, ஆணுறுப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அஜித் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதனால் இரவு முழுவதும் பாலகுரு வலியில் துடித்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்றவர்களுக்கு பாலகுருவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

உடனே அவர்கள் விரைந்துச் சென்று பாலகுருவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது வயிறு மற்றும் ஆணுறுப்பு முற்றிலும் வெந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் அஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for pouring hot water to youth in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->