சீர்காழி || செல்போன் கடையில் திருட்டு - சிசிடிவியால் சிக்கிய தம்பி.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள, சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் ரத்னா எலக்ட்ரிகல்ஸ் மற்றும் செல்போன் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய தம்பி ஜான்சன் அதே பகுதியில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருந்து வந்ததுடன், அதுதொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் ராஜசேகரன் கடையை மூடிவிட்டு சென்ற நிலையில் இன்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது அவரது கடையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன.

இதைபார்த்து, அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தன் சொந்த தம்பியான ஜான்சனே கொள்ளைக் கும்பல் ஒன்றின் உதவியோடு கடையை உடைத்து உள்ளே நுழைந்ததுடன் கடையில் இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

உடனே ராஜசேகரன் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளுடன் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for steal brother mobile shop in seerkazhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->