பழனி - அடுத்தவருடைய ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு விற்பனை செய்த வாலிபர் கைது.!! - Seithipunal
Seithipunal


பழனி - அடுத்தவருடைய ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு விற்பனை செய்த வாலிபர் கைது.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி அருகே சண்முகம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சிம் கார்டு விற்பனை செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது ஓட்டுநர் உரிம அடையாள அட்டை காணாமல் போனதாகவும், அந்த அட்டையை பயன்படுத்தி தனது பெயரில் சிம் கார்டு வாங்கி பயன்படுத்தப்படுவதாகவும் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில், பழநியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அடுத்தவர்களின் அடையாள அட்டைகளை ஆவணங்களாக காட்டி 39 சிம் கார்டுகளை முறைகேடாக விற்பனை செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து போலீசார் சிம் கார்டு விற்பனையாளரான ரமேஷ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for use other person documents for sim sales in palani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->