திருவாரூர் || திருமணம் செய்ய மறுத்த காதலன் - தீக்குளிக்க முயன்ற பெண்ணின் தந்தை.!
man attempt fire on body in tiruvarur
திருவாரூர் || திருமணம் செய்ய மறுத்த காதலன் - தீக்குளிக்க முயன்ற பெண்ணின் தந்தை.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகள் அருணா. இவர் கடந்த 4 ஆண்டுகளாக மதன்ராஜ் என்பவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில், அருணா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மதன்ராஜிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அருணா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "நான்கு வருடமாக காதலித்து வந்த மதன்ராஜ் தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், அவரை கைது செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், போலீசார் இந்தப் புகார் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அருணா காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, அவருடைய தந்தை சந்திரசேகர், தீக்குளிக்க முயநின்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
man attempt fire on body in tiruvarur