விருதுநகர் || வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு - கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் || வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு - கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் திருக்கண்ணன்-அழகியவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே  திருக்கண்ணனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், அழகிய வள்ளி கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். ஆனால் அன்றிலிருந்தே திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த நிலையில் திருக்கண்ணன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. 

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கே திருக்கண்ணன் தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து போலீசார் திருக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man body rescue in viruthunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->