கோவை || வெள்ளையங்கிரி மலைக்கோவிலுக்குச் சென்ற நபர் உயிரிழப்பு.!
man died in vellaiyangiri temple
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து ஐந்தாயிரம் அடியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் பக்தர்களில் சிலர் உடல்நலக்குறைவால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு செல்லும் வழியில் 5 பேர் உடல்நலக்குறைவால் உயிரிந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று 24 மணிநேரத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வெள்ளியங்கிரி கோயிலுக்கு சென்ற கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசனுக்கு குரங்காட்டி பள்ளம் அருகே சென்றபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு அவர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் அடிவாரத்திற்கு கொன்டுவரப்பட்டு, அங்குள்ள மருத்துவ முகாமில் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களில் வெள்ளியங்கிரிக்கு செல்லும்போது ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
English Summary
man died in vellaiyangiri temple