விமானத்தில் மதுபாட்டிலுடன் சிக்கிய இளைஞர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து 132 பயணிகளுடன் தனியார் நிறுவன விமானம் ஒன்று சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கியப்பன் என்ற இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். 

அப்போது அவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது தன்னிடம் இருந்த மதுபாட்டிலை எடுத்து அதில் தண்ணீர் கலந்து குடிக்க தொடங்கியுள்ளார். இதைப்பார்த்த சகப்பயணிகள் உடனடியாக விமானத்தில் இருந்த பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். அவர்கள், விரைந்து வந்து இசக்கியப்பனிடம் இருந்த மது பாட்டிலை பறிமுதல் செய்து, சம்பவம் தொடர்பாக தலைமை விமானியிடம் புகார் செய்தனர். 

இந்த நிலையில் விமானம், சென்னையில் தரையிறங்கியதும், தயாராக இருந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இசக்கியப்பனை சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி இசக்கியப்பன் டெல்லியில் விமானத்தில் ஏறும்போதே மதுபாட்டிலுடன் ஏறியிருந்ததும், பின்னர் சர்வ சாதாரணமாக தண்ணீரை ஊற்றி மது அருந்தியது தெரிய வந்தது. 

இதையடுத்து இசக்கியப்பன் தனது செயலுக்கு போலீசாரிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரை கடுமையாக எச்சரித்ததுடன், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, விசாரணைக்கு தேவைப்பட்டால் மீண்டும் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தார்கள். இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man drink liquar in flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->