நாகை || நிவாரண நிதியை தர மறுத்த அரசு - வாலிபர் செய்த விபரீத செயல்.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே பனையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய தாயார் அம்மாளு அம்மாள் கடந்த 2018ம் ஆண்டு வீசிய "கஜா" புயலில் சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து ராமச்சந்திரன் இறந்த தனது தாயாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக வருவாய் துறையினரிடம் பல முறை மனு அளித்துள்ளார்.

ஆனால், வருவாய்த் துறையினர் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி நிவாரணம் அளிக்க மறுத்துவிட்டதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் பனை மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக வருவாய்த்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, ராமச்சந்திரன் இன்று காலை ஒன்பது மணி அளவில் தோப்புத்துறை ரயில்வே நிலையம் அருகே என்பது அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி, இறந்த தனது தாயாருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை வேண்டும் என்று முழக்கமிட்டவாறு மரத்தின் உச்சியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர், போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் ராமச்சந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அவர் நிவாரணம் கொடுத்தால் மட்டுமே பனைமரத்தை விட்டு கீழே இறங்குவேன் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இருப்பினும் அதிகாரிகளின் தொடர் பேச்சு வார்த்தையால் ராமச்சந்திரன் ஒருவழியாக பனை மரத்திலிருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man protest up palm tree in nagapatinam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->