கன்னியாகுமரி : மகளுடன் வாக்குவாதம் - ஆத்திரத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : மகளுடன் வாக்குவாதம் - ஆத்திரத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு.!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புத்தளம் அருகே வடக்குதேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சாலைப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அதற்காக அவர் தனது குடும்பத்துடன் வல்லன் குமாரன்விளை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், பொன்ராஜ்க்கும் அவரது மகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கோபத்தில் பொன்ராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே பொன்ராஜ் சுற்றுலாத்தலமான சொத்தவிளை கடற்கரையில், விஷமாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் கிடப்பதாக பொன்ராஜ் மகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கடற்கரைப் பகுதிக்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த பொன்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பொன்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide for clash with daughter in kanniyakumari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->