ஆழ்கடலில் மாயமான மச்சான் - மன உளைச்சலில் மைத்துனர் எடுத்த விபரீத முடிவு.!
man sucide for sister husband missing sea in thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அருகே நொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ஆரோக்கியம், பழனிசாமி, விஜயராகவன் உள்ளிட்ட 4 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுப்படகில் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர். அப்போது, ஆழ்கடலில் காற்று அதிகமாக இருந்ததால், திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் அந்தோணி கடலில் மூழ்கி மாயமானார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த சக மீனவர்கள் ஆரோக்கியம், பழனிசாமி மற்றும் விஜயராகவன் உள்ளிட்ட மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து மாயமான மீனவர் அந்தோணியை மீனவர்களும், கடலோரக் காவல் படையினரும் தொடர்ந்து தேடி வந்த போதும், தற்போது வரை அவர் கிடைக்கவில்லை. இவருக்கு, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அந்தோணியின் மைத்துனரான வேதேஸ்வரன் என்பவர், தனது சகோதரி மற்றும் அவரது குழந்தைகளின் நிலை குறித்து கவலை அடைந்து கடும் மன உளைச்சலில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் வேதேஸ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாயமான அந்தோணியை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் மாயமானதைத் தொடர்ந்து அவரது மைத்துனர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man sucide for sister husband missing sea in thanjavur