#BREAKING : நெருங்கும் மாண்டஸ் புயல் .. மேலும், ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் தீவிரப் புயலாக உருவான 'மாண்டஸ்' தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல், மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளையும் தமிழகத்தில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை வேலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandus storm 8 districts school and colleges holiday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->