10, 20, 50 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு? தவிக்கும் மக்கள் - மத்திய அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பத்து, இருபது, ஐம்பது ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏழை மக்கள் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். 

அவரின் அந்த கடிதத்தில், ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது குறைந்துள்ளது.

இதன் காரணமாக சிறு. குறு தொழில்கள் செய்பவர்கள் மற்றும் தின கூலி வேலை செய்யும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிக புழக்கத்தில் பயன்படுத்தக்கூடிய இந்த ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு கிடைப்பதை தடுப்பது என்பது அடிப்படை உரிமை மீறுவது ஆகும்.

பணம் இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்த இந்த குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதாக தெரிகிறது.

அதே சமயத்தில் கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்புகளுக்கான வழியில்லை என்பதை கருத்தில் கொண்டு,  பத்து ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை அதிகப்படுத்த வேண்டும் என்று, ரிசர்வ் வங்கிக்கு நேரடியாக வலியுறுத்த வேண்டும்" என்று அந்த கடிதத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manickam Tagore Nirmala Sitharaman RBI 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->