மணிப்பூர் விவகாரம் | சென்னை மெரினாவில் குவிக்கப்பட்ட போலீசார்! 35 பேர் மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் விவகாரம் நாடும் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தும் அச்சம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் சென்னை மெரினாவிலும் இந்த மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளதாக, தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை அடுத்து மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை மெரினா கடற்கரையில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து, கைபேசி விளக்குகளை ஒளிர செய்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 35க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur issue Chennai Marina beach full police production


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->