மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (18.12.2023) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manonmaniam sundaranar university exam postpond


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->