தமிழகத்தில் இந்த 2 நாட்கள் ஆட்டோக்கள் இயங்காது.. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.

தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.முக. பொது போக்குவரத்து பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பேருந்துகள் பொறுமையாக இருக்க முடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது. ஆனாலும் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மார்ச் 28 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்காது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து பேசி அன்றையதினம் ஆட்டோக்களை இயக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து ஆட்டோக்களும் இயங்காது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

March 28 and 29 auto strike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->