விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. சிறப்பாக நடந்த மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் அடுத்த மருதமலையில் உலகப்புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. முருகப் பெருமானின் 7-வது படை வீடு என்று போற்றப்படும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து மருதமலையில் இந்த ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருதமலையில் கடந்த மாதம் 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதையடுத்து கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமுறை பாராயணம், 6-ம் கால வேள்வி, காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க அர்ச்சகர்கள் திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மருதாச்சல மூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கோபுர கலசங்கள் மீது டிரோன் மூலம் மலர் தூவப்பட்டது. அரோகரா கோஷங்கள் முழங்க இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

maruthamalai murugan temple kumbabhishegam 2025


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->