சிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலை; அடிக்கல் நாட்டும் தமிழக முதல்வருக்கு கருணாஸ் நன்றி..!
Maruthu Brothers Statue in Sivaganga
சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்கள் சிலைக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்ட உள்ளார். அதற்கு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழினத்தின் வீரமரபின் அடையாளம், மண் விடுதலைக்கான முதல் முகவரி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் 22.01.2025 புதன் அன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மட்டுமல்லாமல், ரூ.50 இலட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைக்கிறார்.
சிவகங்கைச் சீமையின் பெருமைக்கு மேலும் வலுசேர்க்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்து நன்றியை நான் சார்ந்த முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் மனமார தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Maruthu Brothers Statue in Sivaganga