தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகள் மூடல் - அதிர்ச்சியில் மதுபிரியர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் சில்லரை கடைகள் மூலமாக மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு ஆண்டுக்கு எட்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி, மே 1-ம் தேதியான நாளை உழைப்பளர் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3 (ஏ), எப்எல்3 (ஏஏ) மற்றும் எப்எல்11உரிமம் கொண்ட பார்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும், மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை தினமான நாளை மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், தனியார் மதுக்கூடங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 1 tasmac shops close in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->