மயிலாடுதுறை: அரசு மருத்துவரின் அலட்சியம்! பிறந்த குழந்தை இறந்த சோகம்! சஸ்பெண்ட், போராட்டம்! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூச்சு விட முடியாமல் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தையின் மரணம் தொடர்பாக அந்த கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பிரசவம் செய்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்யுமாறு மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் உத்தரவிட்டார். 

இந்த நடவடிக்கை எடுத்த பிறகும், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் போராட்டத்தை தொடர்ந்தனர். 

12 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். 

அவர்களால் போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டபோதிலும், போராட்டக்காரர்கள் ஃப்ரீஸர் பாக்ஸை வரவழைத்து, அதில் குழந்தையின் உடலை வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai baby death protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->