மயிலாடுதுறை வெடிவிபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
Mayiladuthurai blast Chief Minister announced financial assistance to the families of the victims
மயிலாடுதுறை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மயிலாடுதுறை மாவட்டம். குத்தாலம் வட்டம் திருவாலங்காடு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடி உற்பத்தி மையத்தில் நேற்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருவாவடுதுறை கிராமம். மேலப் புதுத்தெருவைச் சேர்ந்த 45 வயதான கர்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 45 வயதான லட்சுமணன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கலியபெருமாள் மற்றும் குமார் ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Mayiladuthurai blast Chief Minister announced financial assistance to the families of the victims