பன்றியை வேட்டையாடிய சிறுத்தை.. பதறும் மயிலாடுதுறை.. ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!
Mayiladuthurai collector ordered holiday for private school due to leopard movement
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்று இரவு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நடுரோட்டில் சிறுத்தை ஒன்று வேகமாக ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வனத்துறையினர் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தண்ணீர் செல்லும் வாய்க்கால் அருகே பன்றி ஒன்றை அந்த சிறுத்தை வேட்டையாடி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக கூறைநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டு உள்ளார். மேலும் மயிலாடுதுறையில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிப்பதற்காக சீர்காழி வனசாக அலுவலர் ஜோசப் தலைமையிலான 100 பேர் கண்ட குழு தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளது. சிறுத்தையை கண்டால் 93608 89724 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Mayiladuthurai collector ordered holiday for private school due to leopard movement