தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?
medical course counsiling start augest 21 minister subramanian info
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-
“இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி துவங்குகிறது. முதல் கட்ட கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கிய பின்னர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு போன்றவற்றுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22, 23 ஆம் தேதி நடைபெறும்.
இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதல் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்னை கே.கே.நகர் ஐஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவை தவிர, 21 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 11,500 மருத்துவ இடங்கள் உள்ளன. நடப்பு ஆண்டு நீட் தோ்வில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போனது. உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின் ஆகஸ்ட் 14 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலத்தில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது. அந்த வகையில், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த விண்ணப்ப பதிவில், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்திருந்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சோக்கை கலந்தாய்வுக்கு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 8 வரை விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
medical course counsiling start augest 21 minister subramanian info