மேகதாதுவில் அணை கட்டினால் இதுதான் நடக்கும்... - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!
Meghadatu dam Edappadi Palaniswami interview
எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் காவேரி பிரச்சனை குறித்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
அமைச்சர் துரைமுருகன் விளக்கத்தை ஏற்க மறுத்த அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,
சட்டசபையில் காவிரி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம். உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.
காவேரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் பேரவையில் நிறைவேற்றவில்லை. ஒருவேளை மேகதாதுவில் அணை கட்டினால் மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும்.
டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும். அலட்சியமாக நடந்து கொண்டிருப்பதால் தான் இதனை நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். தி.மு.க அரசு தூங்கிக் கொண்டுள்ளது. விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
Meghadatu dam Edappadi Palaniswami interview