மெட்ரோ ரயில் பணி: சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமம்!
Metro Rail Work sudden pothole road
சென்னை நேற்று மெட்ரோ ரயில் பணியினால் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அடையாறு நோக்கி கிரீன் வேஸ் சாலையில் இருந்து சுங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்த பாதை பணிகள் நடைபெறும் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கிரீன்வேஸ் சாலை சந்திக்கும் பகுதி அருகே நேற்று காலை 1.5 மீட்டர் சுற்றளவில் 2 மீட்டர் ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இதனை பார்த்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளை நோக்கி வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீரமைத்தனர்.
பின்னர் மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு வந்து பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர்.
English Summary
Metro Rail Work sudden pothole road