தொடர் விடுமுறை எதிரொலி - மெட்ரோ சேவையில் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என்று மொத்தம் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் வேலூயோர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிர்வாகம் தனது சேவையில் மற்றம் செய்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"ஆயுத பூஜை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில்கள் காலை 8 முதல் 11 மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும்.

காலை 5 முதல் 8 மணி மற்றும் காலை 11 முதல் மாலை 5 மணி, இரவு 8 முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயங்கும். இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train service change for ayootha poojai holiday


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->