மெட்ரோவில் வேலைவாய்ப்பு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் - மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


மெட்ரோவில் வேலைவாய்ப்பு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் - மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை.!

சமீபத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது. தற்போது இந்தத் தகவலை நம்ப வேண்டாம் என்றும், அது வதந்தி என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் சரிகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி எந்த ஒரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை. 

வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மட்டுமே பகிரப்படும். போலியான விளம்பரங்களை நம்பி இழப்புகள் ஏற்பட்டால் மெட்ரோ நிர்வாகம் பொறுப்பாகாது.

வேலைவாய்ப்புக் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

metro warns to peoples of dont beleive employment rumars


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->