மீண்டும் ரத்து செய்யப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில்...எப்போது வரை தெரியுமா? - Seithipunal
Seithipunal


நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் 31-ம்  தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் தண்டவாளத்தில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மலை ரெயில் சேவை இயக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தநர். இந்நிலையில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் மலைரெயில் பாதையில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே வருகிற 31-ந் தேதி வரை மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettupalayam Coonoor hill train canceled again do you know till when


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->