மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது - வெள்ள அபாய எச்சரிக்கை!
mettur dam almost full flood warn
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 60,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 60,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 60,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதில், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 37,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
mettur dam almost full flood warn