வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை;வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள இளைஞனை தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பட்டான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாய் ,தந்தையுடன் வசிப்பவர் 15 வயது சிறுமி,சம்பவத்தன்று  நேற்று காலை தனது வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.

அப்போது, இதனை நோட்டமிட்ட அந்த வீட்டிற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த 21 வயது இளைஞனான லவ்லேஷ், என்பவன் வீட்டுக்கு சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதையடுத்து தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.அதனை தொடர்ந்து  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள இளைஞனை தேடி வருகின்றனர்.15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 15-year-old girl was sexually assaulted while she was alone at home; Police arrest young man!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->