வருகின்ற ஜூனில் மேட்டூர் அணை திறப்பு! தயாராகும் குறுவை சாகுபடி!
Mettur Dam Opens For Crop Cultivate
2023 ஆம் ஆண்டிற்கான குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை வருகிற ஜூன் 12ல் திறக்கப்பட உள்ளது.
காவிரி நீரைக் கொண்டும் வடிமுனைக் குழாய்கள் மூலமும் மூன்று போகம்(குறுவை, சம்பா, தாளடி) நெல் சாகுபடியானது நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டில் அதிகமான நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினால் முன்கூட்டியே மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.61 கோடி மதிப்பில் விவாசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டதாலும் கடந்த ஆண்டில் 4.26 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றது.
தற்போது அணையின் நீர்மட்டம் 103.6 அடியாக உள்ளது. ஆறுகளும் வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் காவிரி நீரானது கடைமடை வரை சென்று சேருமேயானால் இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறும் என வேளாண்மை துறையினர் தெரிவிக்கின்றனர்.
English Summary
Mettur Dam Opens For Crop Cultivate