மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு திடீரென நிறுத்தம்: காரணம் என்ன?
Mettur Dam stoppage water release
குருவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பருவமழை பெய்யாத காரணத்தினாலும் கர்நாடகா தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்காததாலும் டெல்டா பாசன தேவையை முழுமையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் 8 டி.எம்.சியாக தண்ணீர் குறைந்ததால் ஜனவரி 28ஆம் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 110 நாட்களுக்கு முன்னதாகவே பாசனத்திற்கு தேவையான தண்ணீர் அணையில் இருந்து திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. நேற்றைய நிலவரப்படி அணையில் 8 டி.எம்.சி ஆக இருந்து வினாடிக்கு 122 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
நேற்று மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தற்போது நீர்மட்டம் 30.90 அடியாக அடியாக உள்ளது.
இதனால் குடிநீர் தேவைக்காக மட்டுமே அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
Mettur Dam stoppage water release