காவிரியில் வெள்ளம் எதிரொலி : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 23, 989 கன அடியாக அதிகரிப்பு..!! - Seithipunal
Seithipunal



கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 23 ஆயிரத்து 989 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளின்  குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 46. 80 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 50. 03 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து அணையின் நீர் இருப்பு 17.83 டிஎம்சி யாக உள்ளது. 

நேற்று மாலை வரை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 520 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 23 ஆயிரத்து 989 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அங்குள்ள பரிசல் துறைகளிலும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சேலம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், மற்றும் பல காரணங்களுக்காக செல்வோரும் ஆறுகளைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur Dam Water supply Increases 23989 Cubic Feet Due to Flood In Cauvery River


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->