ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை.. பால்வளத் துறை அமைச்சர் நாசர் வழங்கினார்..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆவின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஆவின் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு 30 பணியாளர்களுக்கு நேரடியாக ஊக்கத்தொகை வழங்கினார். இதன் மூலம் தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பணிபுரியும் 1,375 பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அதேபோன்று மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 2,969 பணியாளர்களுக்கு ரூபாய் 28.47 லஞ்சமும், தொடக்கப்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 22,895 பணியாளர்களுக்கு ரூ. 2.29 கோடியும் ஊக்கத்தொகையாக பால்வளத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.

அதேபோன்று தமிழகம் முழுவதும் 603 தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த சுமார் 98,877 பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் லாபத்தில் இருந்து ரூ. 12.95 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minidter Nasar gave pongal incentive for aavin employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->