பிரதமர் மோடி "கிளவிகள் தினம்" கூட கொண்டாடுவார் - கிண்டலடித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் மணப்பாறை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இத்தனை ஆண்டுகளாக மகளிர் தினம் வரவில்லையா? இப்போதுதான் மகளிர் தினம் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா?

ஆட்சிக் கட்டிலில் உட்கார வேண்டும் என்பதற்காக தேர்தல் வரும்போது பிரதமர் மோடி கிளவிகள் தினம் கூட கொண்டாடுவார். உங்களுக்கு பாக்கு, வெத்தலை இலவசமாக தருகிறேன் என்றும் கூறுவார்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருடனும் நாம் அண்ணன், தம்பி போல பழகி வருகிறோம். நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ.க. செய்து வருகிறது" என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil magesh speech election campaighn in trichy manaparai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->