அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


திமுகவின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10ம் தேதி இரவு அவருக்கு காய்ச்சல் மற்றும் கடும் உடல் சோர்வு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் உடல் சோர்வில் இருந்து குணமடைந்த துரைமுருகன் நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவம் கட்சித் தொண்டர்களிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister DuraiMurugan again admitted in hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->