டெத் ஸ்டோரேஜ்! இனி தண்ணி திறக்கமாட்டோம் - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!
Minister Duraimurugan say about Mettur dam Open issue oct 2023
மேட்டூர் அணையில் இருந்து இனி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றும், காவிரியிலிருந்து 16,000 கனஅடி கிடைக்கப்பெற்றால், அணையை திறக்க வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்கையில், "அக்.30-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், நாளை நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் போகிறோம்.
நேற்றைய கூட்டத்திலும் தமிழகத்துக்கு 16,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தோம். ஆனால், 3,000 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 18 நாட்களில் 4,664 கனஅடி தண்ணீர் வந்தது.
இன்னும் தமிழகத்துக்கு 0.4543 டிஎம்சி தண்ணீர் வரவேண்டியுள்ளது. தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த தண்ணீரை கா்நாடகா விட்டுக்கொண்டிருக்கிறது.
இனிமேல் டெத் ஸ்டோரேஜ் வந்துவிடும். மேட்டுரிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. காவிரியிலிருந்து 16,000 கனஅடி கொடுத்தால், அணையை திறக்க வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
Minister Duraimurugan say about Mettur dam Open issue oct 2023