அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு இதயத்தில் பிரச்சனையா? வெளியான மருத்துவ அறிக்கை! - Seithipunal
Seithipunal


திடீர் மயக்கம் காரணமாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பி உள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித அடைப்பும் இல்லை என்று, தமிழக அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (30.08.2023) அதிகாலை நடைப்பயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்ப்பட்டது.

உடனடியாக கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு (Coronary angiogram) இருதய இரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

அமைச்சர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு, இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Ma Subramaniyan health Report Govt Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->