எனக்கு எதுவும் தெரியாது! அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் அந்தர்பட்டி!
Minister Ponmudi Quarry Case false testimony
அமைச்சர் பொன்மொடியின் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், மேலும் ஒருவர் பிறழ் சாட்சியமாக (false testimony - பொய் சாட்சி) மாறி உள்ளார்.
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில், உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள் சுங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்திருந்தார்.
அப்போது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான செம்மண் வெட்டி எடுத்ததால், தமிழக அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடி, அவரின் மகன் கௌதம் சிகாமணி மற்றும் ராஜேந்திரன், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மீது, கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் ஆகி உள்ளார்.
இந்த வழக்கில் 34 பேர் அரசு தரப்பு சாட்சியமாக அளித்துள்ளனர். அவர்களின் 27 பேர் தற்போது பிறழ் சாட்சியமாக அளித்துள்ளனர்.
முன்னாள் கிராம உதவியாளர் மணி என்பவர், சம்பவத்தன்று அரசு அதிகாரிகளின் அறிவுரை படியே சோதனை நடத்த சென்றதாகவும், சோதனை முடிந்த பின்னர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பெயரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன் என்றும், மற்ற விவரங்கள் எதுவும் தனக்குத் தெரியாது என்றும் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.
English Summary
Minister Ponmudi Quarry Case false testimony