#JUSTIN : புதுக்கோட்டை வேங்கை வயலில் மக்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் - அமைச்சர் பேட்டி.!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூரில், வேங்கைவயல் தெருவில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்காக உள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டி குடிநீரைக் குடித்த சிறுவர்கள் உடல் நலன் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மருத்துவர்கள் குடிநீரால்தான் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்தனர். 

பின்னர் வேங்கைவயல் குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்த தண்ணீரை ஆய்வு செய்த போது அதில் மனித மலம் கலந்து இருப்பதை அறிந்து, உடனடியாக இறையூருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சிலர் மலம் கழித்து வந்தது தெரியவந்தது. 

இந்த சம்பவத்தில் தகாத வார்த்தைகளால் பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் மாற்று சிங்கம்மாள் என்ற பெண்மணியும், இரட்டைக்குவளை முறையை  கடைப்பிடித்து வந்த மூக்கையா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த சமூகம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியபோது, " வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்பு கொண்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதற்காகத்தான் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் இரட்டை குவளை முறை இல்லை. இந்த கிராமத்தின் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ragupathy about Vengaivayal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->