துணை முதலமைச்சர் உதயநிதி - தேதியை பகிரங்கமாக அறிவித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், 19ஆம் தேதிக்கு பிறகு அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக அழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன் விவரம் பின்வருமாறு: துணை முதல்வர்... சாரி... அமைச்சர் உதயநிதி. வருகின்ற 19ஆம் தேதிக்கு பிறகு தான் உதயநிதியை துணை முதல்வர் என்று சொல்ல வேண்டும் என்று நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

ஏற்கனவே வருகின்ற 19ஆம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாகவும், இதில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு அதனை உறுதி செய்யும் படி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர், திமுக தலைவர் முக ஸ்டாலின் இடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, உதயநிதியை துணை முதல்வராக கோரிக்கை வலுத்திருக்கிறதே, தவிர பழுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் திமுக இளைஞரணி மாநாட்டில் துணை முதலமைச்சர் பதவி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், துணை முதலமைச்சர் குறித்து வெளியான அனைத்து செய்திகளும் வதந்திகள் தான். 

இப்போதே சிலர் துண்டு போட்டு வைப்பதற்காக இதனை பரப்பி வருகின்றனர். துணை முதலமைச்சர் பதவி குறித்து தலைவர் தான் (முக ஸ்டாலின்) முடிவு எடுப்பார் என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Rajakannappan say About Deputy CM post for Udhay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->