ஜூன் மாதம் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர் பாபு.! - Seithipunal
Seithipunal


ஜூன் மாதம் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர் பாபு.!

சென்னையின் புறநகர் பேருந்து நிலையமான கோயம்பேட்டில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். இந்த போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டுப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:-

"226 புறநகர் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் 64 ஆம்னி பேருந்துகள் உள்ளிட்டவை நிறுத்தும் வகையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள, பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, தானியங்கி நடைமேடை ஆகியவற்றை ஆய்வு செய்தேன். 

இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகிற ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த பேருந்து நிலையத்தில் 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, ஆட்சியர் ராகுல்நாத், எம்.எல்.ஏ வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அமைச்சர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sekar babu visit kilambakkam new bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->