கோடையில் "மின் தட்டுப்பாடு" வருமா..? வாய்ப்பில்லை ராஜா... அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி..!! - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோடைக் காலம் தொடங்கவுள்ளதால் மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்படுமா..? அதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி "வரும் ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் விநியோகம் கோடைக் காலத்தில் கூடுதலாக ஏற்படுகிற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 4200 மெகாவாட்டுக்கு மேல் கூடுதலாக கோடைக் காலத்தை சமாளிப்பதற்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு தற்பொழுது இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோடை காலத்தை பொறுத்தவரை மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது. தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  இது தொடர்பாக தெடர்ந்து ஆய்வு செய்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்" என பதிலளித்தார்.

மேலும் புதிதாக சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் ஏதாவது அமைப்படுமா..? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் "ஏற்கெனவே 6 ஆயிரம் மெகாவாட் அளவில் சோலார் உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் இப்போது தான் வெளியிடப் போகிறோம்.

டெண்டர் முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை. எந்தச் சிக்கலும் இல்லை. ஏறத்தாழ 99.7 சதவீதம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டனர். இன்னும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே இணைக்காமல் உள்ளனர். அந்தப் பணிகளும் இன்னும் சில நாட்களில் முடிவடையும்" என செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji assured no shortage of electricity during summer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->