டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, 2ஏ தேர்வு முடிவு எப்போது? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் மூலம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் காலதாமதம் ஏற்படுவதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் அரசு மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் நடத்தும் முதன்மை எழுத்து தேர்வு எழுதும் நபர்களை விட தமிழ்நாடு அரசின் குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம்.

மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு நமது மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை. கடந்த மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. வேறு சில தேர்வுகளின்எழுத்து தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலையில் இருந்ததால் இந்த பணி ஆரம்பிக்க சற்று தாமதமானது. 

இது போன்ற காலதாமதம் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது கணிப்பொறி மதிப்பீடு ஆய்வகம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

இதனால் தற்போது மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. என்பது விழுக்காட்டிற்கு மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் எஞ்சிய பணிகளும் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசு பணி நியமன ஆணையை முதலமைச்சரால் வழங்கப்படும். 

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 13,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது அண்மையில் தமிழக முதல்வர் குரூப் 4 தேர்வு பெற்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. 2023-2024 ஆண்டில் மீண்டும் 10,000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Thangam Thennarasu explain TNPSC group 2 exam result


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->