தாலிகட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்: அதிர்ச்சியில் மணப்பெண்! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் செங்கல்பட்டை அடுத்த மெய்யூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்று திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்த நிலையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மாயம்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கும் செங்கல்பட்டை அடுத்த மெய்யூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்று திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, இவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதனையொட்டி நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இருவீட்டாரின் உறவினர்கள்  உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இன்று காலை திருமணத்திற்கு சடங்குகள் செய்வதற்காக சதீஷ்குமாரை அழைத்து வர உறவினர்கள் மணமகன் அறைக்கு சென்றனர்.

அப்போது, சதீஷ்குமார் அங்கு இல்லை. அவருடன் இருந்த நண்பர்களும் மாயமாகி இருந்தனர். இதனையடுத்து, சதீஷ்குமார் ஒட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதனால் மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, உறவினர்கள் சதீஷ்குமாரை பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால், உறவினர்கள் இது குறித்து திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

missing groom at wedding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->